நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்

ஈப்போ:

தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

ஈப்போவில் மகா கவி பாரதியாரின் 143ஆவது  பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை தமிழக சங்கத்தின் ஏற்பாட்டில் உலகத் தமிழ்ச் சங்கதின் துணையோடு துன் வீ.தி. சம்பந்தன்  சேவை மையத்தின் ஆதரவுடன்  உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக செயலாளர்  ஆசிரியர் மணி  இரா.  மாணிக்கம் இவ்விழாவை முன்னெடுத்தார்.

இந்த பிறந்த நாள் விழா ஈப்போ மாநகரில் உள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன்,

இப்போது பலர் நீங்க நல்லா பேசுவீங்க. உங்களுக்கு என கேட்பார்கள்.

காலை முதல் இரவு வரை நாங்கள் படும் பாடு எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என பல மனதில் நினைப்பார்கள்.

ஆனால் மகா கவி பாரதியார் இதை விட மோசமான நிலையில் இருந்தார்.

வீட்டில் சமைக்க ஒரு பிடி அரிசிக் கூட இல்லை. மனைவிக்கு நல்ல துணி எடுத்துக் கொடுக்க பணம் இருக்காது. 

எப்போது பிடிப்படுவார் என்பதும் அவருக்கு தெரியாது. நிலையான வாழ்க்கை இல்லை.

இப்படிவொரு சூழ்நிலையிலும் மகா கவி பாரதியார், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா என பாடினார்.

இப்படிப்பட்ட பாரதியாரை இன்னும் பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

குறிப்பாக ஒருவர் நல்ல தமிழ் பேசினால் சமுதாயம் அவரை புலவராக்கி விடுகிறது. அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளாது.

இது நம் சமுதாயத்தில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை.

உண்மையில் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்வில்  சென்னை தமிழ்ச்  சங்கத்தின் தலைவரும்  உலகச்  தமிழ்ச் சங்கத்தின்  நிறுவனர் டாக்டர் இளங்கோ வருகை புரிந்தார்.

மேலும் தமிழத்தில் இருந்து அறிஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset