நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்

கோலாலம்பூர்:

ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரத்தில் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்.

அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் இதனை கூறினார்.

கடந்த 1975 ஆம் ஆண்டிலேயே நாட்டில் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், இனங்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழை உருவாக்கும் கல்வி முறை இருப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தது.

இதனால் இதை செயல்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

மேலும் சான்றிதழை அங்கீகரிப்பதுதான் பிரச்சினை என்று அவர் கூறினார்.

தேசிய மொழியில் செயல்படுத்தப்பட்டு, தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டால் அதை அங்கீகரிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்தப் பண்புகளை அது பூர்த்தி செய்யாத வரை, அதை தேசியத் தகுதிகளுடன் ஒப்பிட முடியாது என்று அவர் நேற்று இரவு சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset