நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி

கோலாலம்பூர்:

ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது.

சட்டத் துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) இதனை கூறியது.

பணமோசடி, வரி ஏய்ப்பு தொடர்பான 17 குற்றச்சாட்டுகளில் இருந்து ரோஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டது.

இது  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பிற நடவடிக்கைகளைப் பாதிக்காது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியை விடுவித்த முடிவு தொடர்பாக அக்டோபர் 30 அன்று உயர் நீதிமன்றத்திடமிருந்து மேல்முறையீட்டுப் பதிவைப் பெறப்பட்டது.

மேலும் தீர்ப்பின் அடிப்படைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்த பிறகு, மேல்முறையீடு தொடரப்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று திருப்தி அடைந்த பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைத் தொடர வேண்டாம் என்று இந்தத் துறை முடிவு செய்துள்ளது என ஏஜிசி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset