நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு

புத்ராஜெயா:

மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கான அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் நிதி நிறுவனத்திற்கான குறைந்தபட்ச வழிகாட்டுதல்களை (எம்டிடி) வழங்க வேண்டும்.

நேற்று முதல் அடுத்த 45 நாட்களுக்குள் ஆர்எச்பி வங்கி பெர்ஹாட் சமர்பிக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் என்பி ரவீந்திரன், ஃபைசா ஜமாலுடின் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு,

உயர் நீதிமன்ற நீதிபதி அஹ்மத் ஷாஹ்ரிர் முகமது சாலேவுடன் அமர்ந்து, மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் விசாரணைக்கு முந்தைய கண்டுபிடிப்புகளின் மேல்முறையீட்டை அனுமதித்த பின்னர் இந்த முடிவை எடுத்தது.

இந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் விதமாக வழக்கறிஞர் பி.தனேஸ்வரன்,

மேரிடைம் நிறுவனம் சார்பாக ஜேம்ஸ் ஜோசுவா பால்ராஜ், கவிதாரிணி ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து, வங்கி வழக்கறிஞர்கள் கன் கோங் ஐக், லீ ஸ்ஸே சின், டோங் மின் ஜீ ஆகியோரின் தடைக்கான விண்ணப்பத்தையும் குழு நிராகரித்ததாகக் கூறினார்.

இன்று நீதிபதி குழு எங்கள் மேல்முறையீட்டைக் கேட்டு அதை அனுமதித்தது.

பின்னர் நீதிமன்றம் 45 நாட்களுக்குள் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வங்கிக்கு உத்தரவிட்டது என்று அவர்  கூறினார்.

கடந்த ஜூலை 2 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி லியோங் வை ஹாங், கோரப்பட்ட ஆவணங்கள் தேவையில்லை என்ற அடிப்படையில் மேரிடைம் நெட்வொர்க்கின் விண்ணப்பத்தை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset