நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்

கோலாலம்பூர்:

கரம்புனை சட்டமன்ற உறுப்பினர் அலியாக்பர் குலாசன் சபாவில் ஹாஜிஜி நூரின் நிர்வாகத்தை ஆதரிப்பார்.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இதனை கூறினார்.

மாநில அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், ஹாஜிஜியின் நிர்வாகத்தில் அலியாக்பர் புதியவரல்ல.

ஏனெனில் அவர் முன்னர் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

இப்போது அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், இந்த முடிவு கரம்புனை சட்டமன்ற உறுப்பினராக தனது கடமைகளைச் செய்ய அவருக்கு உதவும்.

மேலும் அவர் சபா அரசாங்க அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் எந்தவொரு நல்ல விஷயங்களுக்கும் ஆதரவளிக்கும் ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset