நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்

மலாக்கா:

மலாக்கா நகரில் புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்த பெண்  அவரது அரைகுறை ஆடை காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அந்தப் பெண் அணிந்திருந்த உடை  மிகவும் குட்டையாக இருப்பதாகக் கூறி அவருக்குக் காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

அரசாங்க அமைப்புகளை நாடும்போது மக்கள் முறையாக ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது மலேசியச் சட்டம்.

ஆனால் முன்கள ஊழியர்கள் அவசர நேரங்களில் பொதுமக்களுக்கு உடனடி உதவி வழங்கத் தேவைப்படுவதை கருத்தில் கொள்ளவேண்டும் என்று அமைச்சரவைச் செயலாளர் கூறினார்.

அத்தகைய சூழல்களில் ஆடை விதிமுறைகளைத் தளர்த்த அனுமதி அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மலேசியாவில் அரசாங்க துறைகளுக்கு வருபவர்கள் கண்ணியமாக உடை உடுத்தவேண்டும். ஆனால் அவசர நேரத்தில் அல்லது எதிர்பாராச் சூழல்களில் ஆடை விதிமுறைகளைத் தளர்த்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் தேவையான நேரத்தில் உதவி வழங்கப்படுவதை உறுதி செய்வது தனது நோக்கம் என்று அது சொன்னது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset