நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டை அரசு தரப்பு வாபஸ் பெற்றது

கோலாலம்பூர்:

கடந்த ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற்றுள்ளது.

அந்த தீர்ப்பில், ரோஸ்மா மன்சோரை 7 மில்லியன் ரிங்கிட் பணமோசடி தொடர்பான 12 குற்றச்சாட்டுகளிலிருந்தும், உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு தனது வருமானத்தை அறிவிக்கத் தவறிய ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.

இந்த மேல்முறையீடு கடந்த நவம்பர் 9ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது என ஆவணங்கள் காட்டுகிறது.

இதன் பொருள் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது 1994ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற விதிகளின் விதி 73இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஹுசைன் அகமது ஜமாலுடினை தொடர்பு கொண்டபோது, ​​ரோஸ்மாவும் அவரது பாதுகாப்புக் குழுவும் இந்த முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset