நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐபிஎப் கட்சியின் 33ஆவது தேசிய பேராளர் மாநாடு: டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும்

கோலாலம்பூர்:

ஐபிஎப் கட்சியின் 33ஆவது தேசிய பேராளர் மாநாடு வரும் டிசம்பர் 14ஆம் தேதி செமினியில் Club 360, Ecohill  நடைபெறவுள்ளது.

ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று ஐபிஎப் கட்சியின் தலைமை செயலாளர் மோகன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தேசிய முன்னணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்காக அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் ஐபிஎப் கட்சியை தோற்றுவித்தார்.

பல சவால்கள், போராட்டங்கள் மத்தியில் ஐபிஎப் கட்சி இன்றும் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.

வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மோகன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset