நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கணவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக கத்தி உட்பட பல மாதிரிகளை போலிசார் கைப்பற்றினர்

பட்டர்வொர்த்:

மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது மேலும் விசாரணை நடத்துவதற்காக கத்தி உட்பட பல மாதிரிகளை போலிசார் கைப்பற்றினர்.

மத்திய செபராங் பிறை மாவட்ட போலிஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் இதனை தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள செபராங் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது மனைவியைக் கொல்ல ஒரு நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி உட்பட பல மாதிரிகளை போலிசார் எடுத்தனர்.

விசாரணை நடத்தி வந்த பினாங்கு போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் தடயவியல் குழு இம்மாதிரிகளை எடுத்தது.

காலை 11.30 மணியளவில் சந்தேக நபரிடமிருந்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர் தனது மனைவியை வீட்டில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலின் பேரில்  குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலிஸ் குழு, சம்பவம் நடந்த இடத்தில் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படும் பெண் படுக்கையறையில் மெத்தையில் முழுமையாக உடையணிந்து கிடப்பதைக் கண்டனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் நடவடிக்கைக்காக பல மாதிரிகளை எடுத்தனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset