நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து காஜா சீர்திருத்த மையத்திற்கு சிவக்குமார் நன்கொடை வழங்கினார்

பத்து காஜா:

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பத்து காஜா  சேவை மையத்துடன் சேர்ந்து, பத்து காஜா சீர்திருத்த மையத்திற்கு ஒரு பணி நிமித்தமாக வருகை மேற்கொண்டேன்.

மையத்தின் இயக்குநர், மூத்த அதிகாரிகள் எங்களை அன்புடன் வரவேற்றனர்.

மையத்தில் செயல்படுத்தப்படும் தினசரி செயல்பாடுகள், கைதி மேலாண்மை, பல்வேறு சீர்திருத்த மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து அதன் இயக்குனர் விளக்கினார்.

எனது வருகை பத்து காஜா மக்கள் சேவை மையத்திற்கும் சீர்திருத்த நிர்வாகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியது.

கைதிகளின் நலனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக, சீர்திருத்த மையத்தின் சமையலறையில் பயன்படுத்த உணவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு 5,000 ரிங்கிட் காசோலையை வழங்கினேன் என்று சிவக்குமார் தெரிவித்தார்.

பத்து கஜா சீர்திருத்த மையம் கைதிகளின் மறுவாழ்வு, நலத் திட்டங்களை வலுப்படுத்த பல சிந்தனைமிக்க திட்டங்களையும் சமர்ப்பித்தது.

கைதிகளுக்கு நீண்டகால நன்மைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த உதவியை வழங்கியதாக அவர் சொன்னார்.

இந்த அர்த்தமுள்ள சந்திப்பின் மூலம் இந்தப் பயணம் உறவை வலுப்படுத்தி நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset