நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்

ஈப்போ:

குறைந்த மாணவர்கள் கொணட் தமிழ்ப்பள்ளிகளை அரசாங்கம் மூடாது. மாறாக இடம் மாற்றம்  செய்யப்படும்.

கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இதனை திட்டவட்டமாக அறிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றம் காண்பது எளிதான காரியம் இல்லை.

பல சவால்கள சந்திக்க வேண்டியுள்ளது.  நிச்சயம் காலதாமதம் பிடிக்கும்.

இன்று ஈப்போவில் கம்போங் சீமி எனும் இடத்தில் மண்டபம் ஒன்றில் மித்ரா மூலம்  83 தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

30 மாணவர்களுக்கும்  குறைந்த  எண்ணிக்கைகள் தமிழ்ப் பள்ளிகள் மூட்டப்படும்  எனற அச்சம் கொள்ளவேண்டியயில்லை.

மடானி அரசு தமிழ்ப்பள்ளிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்தப் பள்ளியையும் மூடாது.

இந்த ஆண்டு சுங்கை சிப்புட்டில் இரண்டு் பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதில் சுங்கை சிப்புட்டில் சுங்கை ரேலா  தமிழ்ப்பள்ளி இட மற்றும் கண்ட  பள்ளியாகவும் புதிய பள்ளியாக   ஈவுட் தமிழ்ப்பள்ளியும் திறப்பு விழா கண்டது .


மேலும் சரச்சைகுறிய தமிழ்ப்பள்ளிகள் இடம் மாற்றம் காண்பது புதிய பள்ளிகள் நிர்மாணிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

கரையான்களால் சேதம்  கண்ட பள்ளியான பேரா  மாநில கோப்பெங் தமிழ்ப்பள்ளியை நி்ர்மானிக்க அரசாங்கம் ஒரு  கோடி 40 லட்சம் ரிங்கிட்  நிதி ஒதுக்கீடு செய்துள்ள தகவலையும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset