நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம் 

தைப்பிங்: 

பேராக் மாநிலத்தில் அலகார் தோட்டத்தில் வசிக்கும் ஆனந்தாவிற்கு பேராக் ஐ பி எப் சக்கர நாற்காலி வழங்கியது. இதனை பேராக் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியும், புக்கிட் கந்தாங் அம்னோ தொகுதித்தலைவரான முகமட் சோலேஹான் முஹம்மத் தாஜி எடுத்து வழங்கினார்.

அத்துடன், பாகான் செராய் தொகுதித்தலைவர் ராகவன் தலைமையில் வறுமையிலுள்ள ஓர் இந்திய குடும்பத்திற்கு சமையல் பொருட்களும், நிதியுதவியும் வழங்கப்பட்டது என்று பேராக் ஐ பி எப் தலைவர் வி.மாணிக்கம் கூறினார்.

வறுமையான குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதநேய உதவிகள் செய்ய ஐ பி எப் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset