நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவியைக் கொன்று உடலை 4 நாட்கள் வைத்திருந்த கணவன் சரணடைந்தார்

செபராங் ஜெயா:

மனைவியைக் கொன்று உடலை 4 நாட்கள் வைத்திருந்த கணவன் பின்னர் சரணடைந்தார்.

இங்குள்ள ஜாலான் டுனாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு நபர் தனது மனைவியைக் கொலை செய்ததாக நம்பப்படுகிறது

பின்னர் இன்று சம்பவம் குறித்து அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

மேலும் 28 வயதான சந்தேக நபர் இன்று காலை போலிஸ் நிலையத்தில் சரணடைந்து, அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்ததை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

போலிசார் மேற்கொண்ட விசாரணையில், வீட்டின் ஒரு அறையில் 44 வயதுடைய பெண்ணின் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக, வேலையில்லாத சந்தேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset