நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தின் உயரிய டத்தோ விருது ஃபஹ்மி ஃபட்சிலுக்கு வழங்கப்பட்டது

கிள்ளான்:

டத்தோ அந்தஸ்து கொண்ட டத்தோ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர் (DPMS) விருது தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலுக்கு இன்று வழங்கப்பட்டது.

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவ்விருது வழங்கப்பட்டது.

இங்குள்ள ஸ்ரீ இஸ்தானா அலம் ஷாவில் நடைபெற்ற விழாவில், விருதுப் பெற்ற 98 நபர்களில் அமைச்சரும் ஒருவர்.

ஃபஹ்மியைத் தவிர சிலாங்கூர் கிராமப்புற மேம்பாடு, ஒற்றுமை  நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலும் இவ்விருதை பெற்றார்.

மேலும் மொத்தம் 16 DPMS எனும் டத்தோ விருது வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset