நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை நிறுத்துங்கள்: சிலாங்கூர் சுல்தான்

ஷாஆலம்:

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இதனை வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள் மற்றும் கருத்துகள் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.

மேலும் இனம், மதம், போலிச் செய்திகளின் பரவல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் வருத்தமளிக்கிறது.

எனவே, பதிவுகளைப் பதிவேற்றுவதற்கு அல்லது எதையும் சொல்வதற்கு முன் ஆழமாக சிந்திக்க இணையவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இன அடிப்படையிலான கதைகள், கருத்துக்களின் நன்மைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர்,

இவை அனைத்தும் மக்களிடையே துருவமுனைப்பு, அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset