நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சன் துப்பாக்கிச் சூடு வழக்கில் 3 சந்தேக நபர்களை போலிசார் கைது செய்தனர்

சிரம்பான் -
போர்ட்டிக்சன் துப்பாக்கிச் சூடு வழக்கில் 3 சந்தேக நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிரம்பான் போலிஸ் தலைவர் அசஹார் அப்துல் ரஹீம் இதனை தெரிவித்தார்.

சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள், நேற்று போர்ட்டிக்சன் டோல் பிளாசா அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிரம்பான் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுவிசாரணை நடத்தி சந்தேக நபரை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 40 வயதுடைய இரண்டு ஆண்கள் இன்று அதிகாலை சிரம்பான் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset