நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெய்க்காப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்; படுகாயமடைந்த மற்றொருவருக்கு 15 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்

சிரம்பான்:

மெய்க்காப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவருக்கு 15 குற்றப் பதிவுகள் உள்ளன.

நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது இதனை தெரிவித்தார்.

நேற்று காலை போர்ட்டிக்சன் டோல் பிளாசா அருகே உள்ள ஜாலான் ரசாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.

காலை 7 மணியளவில் நடந்த சம்பவத்தில் உள்ளூர்வாசிகள் இருவரும் பெரோடுவா மைவி காரில் சென்ற போது சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு பலத்த காயமடைந்துள்ளனர்.

சோதனையின் முடிவில், பலத்த காயமடைந்த மற்றொரு பாதிக்கப்பட்டவருக்கு பல்வேறு குற்றங்கள் தொடர்பான 15 குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரையும் பொதுமக்கள் இங்குள்ள துங்கு ஜாபர் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர்.

சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெறுவதற்கு முன்பு இருவரும் ஆபத்தான நிலையில் இருந்தனர்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் 43 வயதுடைய ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset