செய்திகள் மலேசியா
மஹிமாவும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு விரோதி அல்ல: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
மஹிமாவும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு விரோதி அல்ல.
அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் எச்சரித்தார்.
பினாங்கு மாநில குருக்கள் சங்கமும் வட மாநில அர்ச்சகர் சங்கமும் வெளியிட்ட அறிக்கையில் உள்ள கூற்றுகள் யாவும் என் மீது சுமத்தப்பட்ட தனிமனிதச் சாடலாக மஹிமா கருதுகிறது.
மஹிமாவின் தலைவரான நானும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் ஒருபோதும் உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு விரோதி அல்ல என்பதை முதலில் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
மஹிமாவின் நிலைப்பாடு என்னவென்றால் ஒரு சில முக்கிய ஆலய சடங்குகளுக்கும் கும்பாபிஷே நிகழ்வுகளுக்கும் வெளிநாட்டில் இருந்து வரும் அர்ச்சகர்களின் பங்களிப்பு அவசியமாகும்.
அதற்காக நம் நாட்டின் அர்ச்சகர்கள் இதில் பங்குப்பெறக்கூடாது என மஹிமா ஒருபோதும் கூறவில்லை.
நம் நாட்டில் உள்ள அர்ச்சகர்களும் இந்திய நாட்டிற்குச் சென்றுதான் முறைப்படி வேதங்களைக் கற்றுக்கொள்கின்ற நிலையில், அந்நாட்டு குருக்கள்களை மட்டும் தேவைக்கு ஏற்ப அழைத்து பூஜைகளைச் செய்ய அனுமதிப்பதில் என்ன தவறு இருக்கிறது.
மேலும், ஆலய பூஜைகள் உட்பட பெரிய கும்பாபிஷேக விழாவை நடத்துவதில் உண்மையிலேயே அனுபவம் வாய்ந்த திறமையான உள்ளூர் குருக்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முதலில் அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய குருக்கள் சங்கம் முன்னெடுக்க வேண்டும்.
குருக்களுக்கு முறையான கல்வியும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்க முதலில் இந்தச் சங்கம் செயல்புரிய வேண்டுமே தவிர குருக்கள் நியமனங்களில் தலையிடுவது சரியன்று.
ஏனெனில் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தும் கோவில்களின் நிர்வாகமே அதற்கான செலவுகளை ஏற்கும் பட்சத்தில் எந்த குருக்களை நியமிக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் மூன்றாம் தரப்பினரிடம் வழங்க வேண்டும் என்றே நான் கேள்வி எழுப்பினேன்.
ஆலயங்களை வைத்து அரசியல் செய்யும் ஒரு சில அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு அடிப்பணிவதைக் காட்டிலும் உள்நாட்டு குருக்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கல்களைக் களையப் பினாங்கு மாநில குருக்கள் சங்கமும் வட மாநில அர்ச்சகர் சங்கமும் முயற்சியை மேற்கொள்ளலாமே.
திவேட் வாயிலாக குருக்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் எனும் பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசனின் கூற்று எவ்வகையில் சாத்தியப்படும்?
ஏனெனில் குருக்கள் தொழில் எவ்வாறு இந்தப் பிரிவில் உள்ளடங்கும்.
மாறாக முதலில் நம் நாட்டு வாழ் இந்திய குருக்கள்களின் வேலையை முறையாக அங்கீகரித்தும் நீண்டகால பாதுக்காப்பினையும் வழங்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
குறிப்பாக குருக்கள்களுக்கு அடிப்படைத் தேவைகளான
ஈபிஃப் மற்றும் சொக்சோ வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
காரணம் அப்போதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படும்.
மேலும் மஹிமா எப்போதும் உண்மைக்கும் தெளிவான நோக்கத்திற்கும் தான் செயல்படுமே தவிர வெற்று நாடகங்களுக்கு அல்ல என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
