நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக ரோபோட் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆதிக்கம்: 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்

ஜார்ஜ் டவுன்:

அனைத்துலக ரோபோட் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.

தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மலேசிய மாணவர்கள், ஒன்பது முக்கிய பிரிவுகளில் பங்கேற்று 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.

மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றிகளில், சுமோ ஜூனியர், ட்ரோன் கால்பந்து பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களை வென்றது அடங்கும்.

இந்த இரண்டு பிரிவுகளும் போட்டியின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

மேலும் நாட்டின் பங்கேற்பாளர்கள் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெற்றனர்.

இது முந்தைய ஆண்டு பங்கேற்புடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

முன்னதாக அனைத்துலக ரோபோட் போட்டியில் சாதித்த மாணவர்களை பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினரும் தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ வரவேற்று சிறபித்தார். 

மேலும் தமிழ்க் கல்வியின் தரத்தை தொடர்ந்து வலுப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகும்.

இதில் ஸ்டேம், ரோபாட்டிக்ஸ், தொழில்நுட்பத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதும் அடங்கும்.

இதனால் அதிகமான மாணவர்கள் சர்வதேச அரங்கில் நிற்க முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset