நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் நிலையத்தில் ஆடைக் கட்டுப்பாடு விரைவில் மதிப்பாய்வு செய்யப்படும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

போலிஸ் நிலையங்கள்,  முன்னணி அரசு சேவைகளில் ஆடைக் கட்டுப்பாடு விரைவில் மதிப்பாய்வு செய்யப்படும்.

அரசாங்க செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை தெரிவித்தார்.

இந்த விஷயத்தில், மக்கள் போலிஸ் அறிக்கைகளை தாக்கல் செய்வதைத் தடுக்கும் எந்த சூழ்நிலையும் இருக்கக்கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கருதுகிறார்.

சுகாதாரம், பாதுகாப்பு, காவல் நிலையங்கள் உள்ளிட்ட சில முன்னணி அரசுத் துறை சார்ந்த சேவைகளுக்கு இந்த சுற்றறிக்கையிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை எடுத்த முடிவைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் 2020 சுற்றறிக்கையை மதிப்பாய்வு செய்து பல மேம்பாடுகளைச் செய்வார்.

இந்த விஷயத்தை மாநிலத் தலைமைச் செயலாளர் அலுவலகம் கவனமாக பரிசீலித்து வருகிறது. 

புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு  நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset