நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோன்ட் கியாரா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: ஆடவர் மரணம்

கோலாலம்பூர்:

மோன்ட் கியாரா அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.

கோலாலம்பூர், மோன்ட் கியாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 26ஆவது மாடியில் நேற்று இரவு  தீ விபத்து நிகழ்ந்தது.

டிஃப்பானி கியாரா அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
கட்டிடத்தின் தீயை அணைக்கும் அமைப்பு சரியாகச் செயல்படவில்லை.

இதனால் தீயணைப்புப் படையினர் தண்ணீரை பம்ப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அணைக்கும் பணியில் சிரமங்களை எதிர்கொண்டது.

இந்த சம்பவத்தில் வீட்டின் பால்கனியில் 100% தீக்காயங்களுடன் ஒருவர் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 2.03 மணிக்கு தீ வெற்றிகரமாக முழுமையாக அணைக்கப்பட்டது.

சுமார் 1,500 சதுர அடி பரப்பளவு  100% எரிந்து நாசமானது என் அத்துறை கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset