நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் இட நெருக்கடி பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்: குலசேகரன்

ஈப்போ:

ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன்  மருத்துவமனையின் இட நெருக்கடி  பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

பிரதமர் துறையின் (சட்டம்) துணையமைச்சர் எம். குலசேகரன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

ஈப்போவில் உள்ள அரசாங்க மருத்துவமனையான ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவ மனை அவசர பிரிவில் நோயாளிகள் எதிர்நோக்கும் இட நெருக்கடி, போதிய படுக்கை (கட்டில் ) பற்றாக்குறை எதிர் நோக்கப்படும் விவகாரத்திற்கு தீர்வுக்காணப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டது.

ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை  1891ஆம் ஆண்டு ஈப்போ  மாவட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. 

பின்னர் 1942 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ராஜா பெர்மைசூரி்மைனுன் என்ற பெயரில்  அந்த மருத்துவமனையாக பெயர் மாற்றப்பட்டது.

பராமரிப்பு வளாகங்கள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளைக் கொண்ட மலேசியாவின் மூன்றாவது பெரிய மருத்துவமனையான விளங்கு வரும் அதில் நோயாளிகள் தங்கி சிகிச்சைப் பெற போதி படுக்கை (கட்டில்) பற்றாக் குறை , அவசர பிரிவில் சிகிச்சைப் பெற இட நெருக்கடியை நோயாளிகள் எதிர்நோக்கி  வருகிறார்கள்.

இதுபோன்று பல புகார்களை பொது மக்களிடமிருந்து பெற்றதை  சட்டத் துறை துணையமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை இந்த மருத்து மனையின் அவரச பிரிவிற்கு வருகை அளித்த  எம். குலசேகரனை மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் பைசூல் இட்ஸ்வான்   வரவேற்று அவரை  அவசர பிரிவு பகுதிற்கு அழைத்துச் சென்று அங்கு  எதிர்நோக்கும் பிரச்சனைகளை விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குலசேகரன்,  இந்த இட நெருக்கடியை சமாளிக்க அதிகமான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது அதனை  உடனடியாக சரி செய்ய இயலாது.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்ற தகவலைத் தெரிவித்தார்.

அவசர பிரிவில் உள்ள கழிப்பறைகள் சீரமைக்க 50 ஆயிரம் மானியம் ரிங்கிட் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனையில் தற்பொழுது நோயாளிகள் தங்கி் சிகிச்சைப் பெற 1100 படுக்கைகள் மட்டுமே  உள்ளது. 

அது போதாது என்ற புகாரும் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

இந்த விவகாரத்திற்கு தீர்வுக்கான சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset