நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது

கோலாலம்பூர்:

தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திராகாந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது

மறைவாக இருக்கும் முன்னாள் கணவரை கண்டுப் பிடிக்கவும் அவரிடம் இருக்கும் தன் மகளை மீட்கவும் இந்திரா காந்தி போராடி வருகிறார்.

இந்நிலையில் தேசிய போலிஸ்படைத் தலைவர் (ஐஜிபி) உடனான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு எனக்கு ஏமாற்றமளிக்கும் நிகழ்வாக மாறியது.

இந்திரா காந்தி நடவடிக்கை குழு (இங்காட்) இன்று போலிஸ் அதிகாரிகள் அவரின் அவல நிலையை அறிந்திருக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியது.

இந்திராவின் மகள் பிரசன்னா திக்ஸா காணாமல் போனது குறித்த கூட்டத்திற்குப் பிறகு புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இங்காட் தலைவர் அருண் துரைசாமி,

இந்த சந்திப்பை சாதாரணமாக கருதினார். மேலும் அவர்கள் எந்த கோப்புகளை வைத்திருக்கவில்லை.

இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் போலிசாருடன் ஒத்துழைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

ஆனால் நாங்கள் எதையும் செய்வதற்கு முன்பு அவர்கள் முன்வந்து (விசாரணை செய்ய) கொஞ்சம் தீவிரத்தைக் காட்ட வேண்டும்.

ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பு ஒரு அர்த்தமற்ற விவாதம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset