நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில்  பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி

கோலாலம்பூர்:

இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி முதல் முறையாக  செனட்டராக பதவியேற்றேன்.  

முதல் தவணை இவ்வாண்டு டிசம்பர் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இரண்டாவது தவணைக்காக இன்று காலை 10 மணியளவில் மேலவை தலைவர் டத்தோ அவாங் பெமி பின் அவாங் அலி பாசா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டேன். 

தன் மீது நம்பிக்கை வைத்து செனட்டர் உட்பட துணையமைச்சர் பதவியை வழங்கிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மடானி அரசாங்கத்தின் கீழ் முதல் முறையாக  தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணையமைச்சராக ஓராண்டு காலம் பணியாற்றிய போது சிறப்பான சேவையினை வழங்கியிருந்தேன். 

தற்போது தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சராக பணியாற்றி வருகிறேன். இதன் மூலம் மக்களுக்கான எனது பணி தொடரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.  

இவ்வேளையில் எனக்கு  வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 

என்னுடன் இணைந்து இரண்டாம் தவணைக்கு செனட்டராக உறுதி மொழி எடுத்துக் கொண்ட உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் ஃபூசியா சாலே அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset