நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர்:

மலாக்கா டுரியான் துங்கலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் இன்று புக்கிட் அமான் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு மேல் குடும்ப உறுப்பினர்கள் புக்கிட் அமான் வந்து சேர்ந்தனர்.

அவர்களுடன் வழக்கறிஞர் ராஸேஷ் நாகராஜன், ஆகம அணி தலைவர் அருண் துரைசாமி உட்பட  குடும்ப உறுப்பினர்கள் வந்தனர்.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா டுரியான் துங்கலில் நடைபெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் யோகேஸ்வரன் ( வயது 29) புஷ்ப நாதன் (வயது 21 ( மற்றும் புவனேஸ்வரன் ( வயது 24 ) ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர்  யோகேஸ்வரன் தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் பேசிய ஆடியோ  இப்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த ஆடியோ பதிவு புக்கிட் அமானில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக யோகேஸ்வரன் மனைவி ஜெய்ஸ்ரீ, புவனேஸ்வரன் மனைவி ஜானு மற்றும்  புஷ்பா நாதன் தந்தை முரளி ஆகியோரிடம் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

இதனிடையே,  சட்டத் துறை துணை அமைச்சர் எம்.குலசேகரன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடத்தபபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset