செய்திகள் மலேசியா
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
கோலாலம்பூர்:
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ராஜசேகரன் இதனை கூறினார்.
அரசாங்கத்தின் சமீபத்திய சீர்திருத்தங்களின் திசையை மதிப்பிடுவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்த ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கின் அறிக்கை குறித்து அவர் இக்கேள்வியை எழுப்பினார்.
ஜசெக அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியாகவும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருப்பதாலும் இந்த அறிக்கை பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் வெற்றிபெறுமா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? அறிக்கையில் உள்ள பல வாக்குறுதிகள் தெளிவான செயல்படுத்தல் இல்லாமல் வெறும் கனவுகளாகவே இருக்கின்றன.
சமீபத்திய சபா மாநிலத் தேர்தலில் அரசாங்கம் பெரும் தோல்வியைச் சந்தித்த பின்னரே சில பிரச்சினைகள் ஏன் எழுப்பப்பட்டன என்பதையும் அவர் மேலும் கூறினார்.
மின்னணு விலைப்பட்டியல் பிரச்சினை குறித்து பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் இப்போது மட்டும் ஏன் பேசுகிறார்?
போலிஸ் தலைவருடனான சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத் துணையமைச்சர் இப்போது மட்டும் இந்திரா காந்தி ஆதரவு பேரணிக்கு செல்வது ஏன்? என்று அவர் கேட்டார்.
ஜசெக தலைவர்கள் தலைமையிலான பல அமைச்சகங்களின் கொள்கை, நிர்வாகத் தோல்விகளும் மக்களின் கருத்துக்களைப் பாதித்ததாக டத்தோ ராஜசேகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
கெப்போங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது
December 9, 2025, 4:23 pm
