நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெப்போங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது 

கோலாலம்பூர்:

கெப்போங்கிற்கு அருகிலுள்ள தாமான் வாங்சா பெர்மாயில் உள்ள ஓர்  அடுக்குமாடி குடியிருப்பில், ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், கூர்மையான ஆயுதத்தை காட்டி மிரட்டியதாகவும் கூறி, நேற்று ஒரு வெளிநாட்டு நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முஹம்மது நசீர், இந்த சம்பவம் காலை 11.30 மணிக்கு நடந்ததாகவும், பொதுமக்களின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும்அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான தகவல்களை கூற விரும்புபவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் டி வேல்ராஜை 013-3631913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, அடுக்குமாடி குடியிருப்பில் கலவரத்தை ஏற்படுத்தி ஆக்ரோஷமாக நடந்து கொண்ட அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் காட்டும் வீடியோ, பொதுமக்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset