செய்திகள் மலேசியா
நிலுவையில் உள்ள சம்மன்கள் BUDI95 திட்டத்தின் மூலம் பெறப்படும் உதவியைப் பாதிக்காது: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
கோலாலம்பூர்:
BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெட்ரோலைப் பெற அடிப்படையிலான இரண்டு நிபந்தனைகளே உள்ளன. அவை குடியுரிமை நிலை, செயலில் உள்ள ஓட்டுநர் உரிமம் ஆகும்.
இந்த திட்டம் தனித்துவமான முறையில் இயங்குகிறது. எவரின் போக்குவரத்து சம்மன்களுடன் நேரடியாக தொடர்புடையதல்ல என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
“BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெட்ரோலைத் தொடர்ந்து பெற பொதுமக்கள் மைகார்ட் மூலம் உறுதி செய்யப்பட்ட மலேசிய குடியுரிமையுடையவராக இருக்க வேண்டும், மேலும் செயலில் உள்ள ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.
“செயலில் உள்ள ஓட்டுநர் உரிமம் என்பது காலாவதி ஆகாமல் செல்லுபடியாக உள்ள உரிமத்தைக் குறிக்கிறது அல்லது அதன் காலாவதி தேதி மூன்று ஆண்டுகளை மீறாமல் இருக்க வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
சம்மன்களைத் செலுத்தத் தவறினால் இத் திட்டத்தில் இடம்பெற முடியாது என்ற கூற்றிற்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்த நிபந்தனைகள் தற்போதைய கொள்கையின் ஒரு பகுதியாகும். மேலும், உதவி திட்டங்கள் வழங்கும் செயல்முறை சீராக நடைபெறவும், சரியானவர்களைச் சென்றடையவும் உருவாக்கப்பட்டவை.
அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்புக்காக மக்கள் போக்குவரத்து விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
கெப்போங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது
December 9, 2025, 4:23 pm
