நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்

பேங்காக்:

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

இன்று ஃபேஷன் ஐலேண்டில் சீ விளையாட்டுப் போட்டியின் தெக்குவாண்டோ போட்டி நடைபெற்றது.

இதில் தேசிய மகளிர் தெக்குவாண்டோ அணி, முதலிடத்தில் உள்ள தாய்லாந்தை வீழ்த்தி, மலேசியாவிற்கு எதிர்பாராத தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
சீ ஜிங் யிங், வோங் ஜின், யோவ் மெய் யீ ஆகியோர் இந்த சீசனின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி, 8,560 புள்ளிகளைப் பெற்று, இறுக்கமான இறுதிப் போட்டியில் 8,450 புள்ளிகளைப் பெற்ற போட்டியாளர்களை வீழ்த்தினர்.

மலேசிய அணி வெற்றியாளர் என்ற வார்த்தைகள் திரையில் தோன்றியவுடன் மலேசிய அணியிலிருந்து ஒரு சிறிய ஆரவாரம் எதிரொலித்தது.

இது மாபெரும் ஒரு வெற்றியை உறுதிப்படுத்தியது.

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset