நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா புலாவ் பெசாரில் இனி மீனவர்கள் மீன் பிடிக்கலாம்: தடை நீக்கப்படும் என்று டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே அறிவிப்பு

மலாக்கா:

புலாவ் பெசாரைக் கடல்சார் பூங்காவாக அரசு பதிவேட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும் என்று மாநில ஊரக மேம்பாடு, வேளாண்மை, உணவுப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே தெரிவித்தார். மலாக்கா அரசாங்கம், மாநிலத்தின் அனுமதிக்கப்பட்ட மீன்பிடிப் பகுதிகளை விரிவுபடுத்த உதவும் வகையில், இது அறிவிக்கப்படுவதாக அவர் கூறினார்.

1994 முதல் கடல் பூங்காவாக அரசு பதிவேட்டில் வெளியிடப்பட்டு மீன்பிடி தடை மண்டலமாக அறிவிக்கப்பட்ட தீவுகளில் புலாவ் பெசார் தற்போது உள்ளது என்று அவர் கூறினார்.

“மாநில நிர்வாகக் குழு (MMKN) கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம், மேலும் புலாவ் பெசார் பகுதியை கடல் பூங்கா பட்டியலில் இருந்து நீக்க ஒப்புக்கொண்டோம்.

“புலாவ் பெசாரைச் சுற்றியுள்ள மீன்பிடி தடை மண்டலத்தை வர்த்தமானியில் இருந்து நீக்கக் கோர வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு கடிதத்தையும் சமர்ப்பிப்போம்,” என்று அவர் இன்று மலாக்கா மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது அவர் கூறினார்.

மீன்பிடித் தடை காரணமாக,  வருமானம் குறைந்துள்ள  மீனவர்களுக்கு உதவ மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள்  குறித்து கேட்ட டாக்டர் முகமது அலீஃப் யூசோப்பின் (PN-சுங்கை உடாங்) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

புலாவ் பெசாரில் இருந்து கெஸட்டில் இருந்து நீக்கம் செய்யும் முடிவும் அருகிலுள்ள மூன்று தீவுகளான புலாவ் உண்டன், புலாவ் டோடோல், புலாவ் நங்காவை வர்த்தமானியில் இருந்து நீக்கம் செய்ய மாநில அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது என்று டாக்டர் முஹம்மது அக்மல் கூறினார்.

“கடந்த காலங்களில், புலாவ் பெசார் ஒரு கடல் பூங்காவாக அரசு பட்டியலில் வெளியிடப்பட்டபோது, ​​மீனவர்கள் அங்கு எந்த மீன்பிடி நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூன்று தீவுகள் கடல் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டதன் மூலம், அவர்களின் மீன்பிடி தளங்கள் முடங்கின.

“இந்த நீக்கம் அங்கீகரிக்கப்பட்டவுடன், மீனவர்கள் புலாவ் பெசாரைச் சுற்றி மீன்பிடிக்க முடியும், மேலும் வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான ஒப்புதலை வழங்கும்” என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset