செய்திகள் மலேசியா
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
புத்ராஜெயா:
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் உரிய
பதிலை சொல்ல வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
கோல குபு பாருவில் உள்ள காலை சந்தையில் சகோதரர் யாப் தோங் ஃபாங் கோழி வியாபாரம் செய்து வருகிறார்.
ஹலால் அடிப்படையில் அவர் இந்த வியாபாரத்தை செய்து வருகிறார்.
குறிப்பாக இந்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே அவரின் தாயார் இங்கு வியாபாரம் செய்துள்ளார்.
பல தலைமுறைகளாக அவரிகளின் வியாபாரம் இங்கு தொடர்கிறது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் செலவில் கோல குபு பாரு சந்தை மேம்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த மேம்பாட்டு பணிகளில் பல பிரச்சினைகள் உள்ளது. இப்பிரச்சினைகளை யாப் தோங் ஃபாங் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் ஐந்து மேஜைகளை போட்டு வியாபாரம் செய்து வந்த அவருக்கு முறையான இடம் கிடைக்கவில்லை.
அவரின் வியாபார உரிமமும் பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் போலிஸ் புகாருடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என சுஹாகாமில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.
இம்முயற்சிகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தான் இன்று வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சுக்கு வந்தோம்.
அமைச்சர் ங்கா கோர் மிங்கை சந்தித்து இவரின் பிரச்சினை கூற நாங்கள் முயற்சித்தோம்.
ஆனால் மக்களின் பிரச்சினையை கேட்க அமைச்சருக்கு நேரமில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
இருந்தாலும் இப்பிரச்சினைக்கு அமைச்சர் உரிய தீர்வை காண வேண்டும்.
இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 11, 2025, 9:48 am
இந்திரா காந்தியின் மகளை கண்டுப் பிடிக்க உதவ போலிசார் தொடர்ந்து உறுதி கொண்டுள்ளனர்: ஐஜிபி
December 10, 2025, 8:59 pm
தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது
December 10, 2025, 8:58 pm
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்
December 10, 2025, 8:56 pm
இந்திய சமுதாயத்திற்கான மித்ராவின் இலக்கு மாறவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
