செய்திகள் மலேசியா
உலக முஸ்லிம் தொழில்முனைவோர் சிறப்பு விருது: டத்தோஸ்ரீ பரக்கத் அலிக்கு மலாக்கா கவர்னர் வழங்கினார்
கோலாலம்பூர்:
சர்வதேச முஸ்லிம் தொழில் முனைவோர் கருத்தரங்கம் இன்று காலை இண்டர்காண்டினெண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.
துன் செரி செத்தியா டாக்டர் முஹம்மத் அலி முஹம்மது ருஸ்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை எடுத்து வழங்கினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்ள வேண்டிய இந்த விருதளிப்பு விழா டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் டான் ஸ்ரீ அப்துல் வாஹித் ஒமர், வங்காகதேசத்தின் Seaco நிறுவனத்தின் தலைவர் சலாஹுத்தீன் காசெம் கான், இந்தோனேசிய CDCC தலைவர் பேராசிரியர் தீன், கஜகஸ்தான் தூதர் புலாட் சுகுர்பயாவ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் இஸ்லாமிக் வங்கியின் தலைமை செயல்முறை அதிகாரி பிலால் பர்வேஸ், பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹம்மத் அஸ்மி ஒமர், பேங்க் ரக்யாட் இயக்குனர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வசிஹர் ஹசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.
வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 20 வர்த்தகப் பிரமுகர்களுக்கு மலாக்கா கவர்னர் துன் செரி சத்தியா முஹம்மத் அலி முஹம்மது ருஸ்தம் விருதுகளை வழங்கினார்.
World Muslim outstanding Entrepreneur Excellence Award பரக்கத் குழுமத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ பரக்கத் அலி பெற்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை Brahim's Dewine குழுமத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ இப்ராஹிம் ஹாஜி அஹ்மத் பதாவி பெற்றார்.
World Muslim Leadership Excellence Award ஹலால் டெவலப்மெண்ட் கார்பரேஷன் சி இ ஓ ஹைருல் ஆரிஃபின் சஹாரி பெற்றார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 8:59 pm
தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது
December 10, 2025, 8:58 pm
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்
December 10, 2025, 8:57 pm
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
December 10, 2025, 8:56 pm
இந்திய சமுதாயத்திற்கான மித்ராவின் இலக்கு மாறவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
