நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்

ஈப்போ: 

இங்குள்ள லிட்டல் இந்தியா வளாகத்தில் aA கிலாசிக் ஹோம் மூன்றாவது கிளை நிறுவனத்தை திறப்பு விழா செய்துள்ளது. இந்த வர்த்தக நிறுவனம் பூஜை மேடைகள் விற்பனை செய்யும் நிறுவனமாக திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் 3 வது கடையை ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் திரைப்பட நடிகை ஸ்ரீ திவ்வியா.

பூஜை மேடைகள் கடையை திறந்து வைத்த பின் இக் கடையை பார்வையிட்டார் நடிகை ஸ்ரீ திவ்வியா. இந்த கடையின் அமைப்பையும் இங்குள்ள பொருட்களை காணும் பொழுது உள்ளம் குளிர்கிறது என்றும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, இங்கு வைக்கப்பட்டுள்ள ஊஞ்சல்கள் என் மனதை கவர்ந்து விட்டது. ஆகையால், இங்குள்ள பொருட்களில் ஊஞ்சல்களை வழங்கினால் எடுத்துச் செல்வேன் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ், அவரது இணை இயக்குநர்கள் மேலும் அதிகமான இதுபோன்ற கிளை நிறுவனங்களை திறக்க வேண்டும். அத்துடன், அவர்களது வணிகம் மென்மேலும் மேம்பாடு காண வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், இந்நிறுவனம் சமூக மனிதநேயப் பணியாக ஈப்போ வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கினர். அதுமட்டுமின்றி, இங்குள்ள ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக ராகா வானொலி நிலைய அறிப்பாளர் விகடகவி மகேன் வருகையாளர்கள் சுமார் 100 அன்பர்களுக்கு உத்திராட்சம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி அறிவிப்பாளரும், நடிகருமான உதயாவின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக வழிநடத்தப்பட்டது. அதோடு வருகையாளர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset