செய்திகள் மலேசியா
ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியை கட்டி காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது: செனட்டர் சரஸ்வதி
பெஸ்தாரி ஜெயா:
ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியை கட்டி காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.
பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நேர்த்தி நிறை, ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு பிரமுகராக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
தோட்டப்புறத்தில் ஒரு மாளிகை என்று தான் இந்த பள்ளி வர்ணிக்கப்படுகிறது.
அங்கு நேரில் சென்று பார்த்தப் போது உண்மையில் பெருமைப்படும் வகையில் தான் பள்ளி செயல்பட்டு வருகிறது என்று சிறப்புரையாற்றிய அவர் கூறினார்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பள்ளியின் அமைப்பு சிறப்பாகவே உள்ளன. தலைமையாசிரியர் மகேஸ்வரி சுப்ரமணியம் தலைமையில் இப்பள்ளி பல்வேறு உருமாற்றங்களை கண்டுள்ளது.
100 ஆண்டை எட்டவிருக்கும் இந்த பள்ளி சுற்றுவட்டார தோட்டங்களின் சரித்திரப்பூர்வ சான்றாக அமைகிறது.
இத்தோட்ட பள்ளியை கட்டி காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மடானி அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது.
எனவே, தமிப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
இதற்கு இத்தோட்ட தமிழ்ப்பள்ளி சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
தொலைவில் இருந்தாலும் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இந்த பள்ளிக்கு அனுப்புகின்றனர். இது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயமாகும்.
இந்த பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்தாண்டு முதலாம் ஆண்டிற்கு இதுவரையில் 7 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தலைமையாசிரியர் கூறியிருந்தார்.
இன்னும் கூடுதலாக 10 மாணவர்கள் இப்பள்ளியில் பயில பதிவு செய்தால் அந்த 10 மாணவர்களுக்கான போக்குவரத்து பொறுப்பினை தாம் ஏற்றுக் கொள்வதாக துணையமைச்சர் சரஸ்வதி வாக்குறுதி அளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 8:59 pm
தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது
December 10, 2025, 8:58 pm
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்
December 10, 2025, 8:57 pm
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
December 10, 2025, 8:56 pm
இந்திய சமுதாயத்திற்கான மித்ராவின் இலக்கு மாறவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
