செய்திகள் மலேசியா
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக தலைவராக சிலிம் ரிவர் பழனி சுப்பையா வெற்றி
மடானி கோட்பாட்டில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கம் 2025
ஈப்போ:
கடந்த 26 நவம்பர் 2025 -28 நவம்பர் 2025 (புதன் வியாழன் வெள்ளி) நடைபெற்ற மடானி கோட்பாட்டில் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கம் அதிகாரபூர்வ திறப்பு விழா மாண்புமிகு ஓங் கா வோ, கல்வி துணை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் தலைமையாசிரியர்களுக்கான தலைமைத்துவம் நிர்வாகத்திறன் எனும் தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. நாடு தழுவிய அளவில் திறளான தலைமையாசிரியர்கள் கலந்து சிப்பித்தனர்.
இவ்வருடம் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகப் பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாக தேர்தலில் பழனி சுப்பையா, P.P.T. தலைமையாசிரியர், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி பேரா மாநிலம் வெற்றி பெற்று தலைவராக நியமிக்கப்பட்டார்.
இத்தேர்தலில் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகம் தேர்வுபெற்றது. உயர்திரு. பழனி சுப்பையா, P.P.T.
தலைமையாசிரியர், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி பேரா மாநிலம் அவர்கள் வெற்றி பெற்று தலைவராக நியமிக்கப்பட்டார்,
துணைத்தலைவராக டோமினிக் சவரிமுத்து, ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவர் ஆவார். செயலாளராக சிவக்குமார் வெள்ளச்சாமி, நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவர் ஆவார்.
துணைச் செயலாளர் சந்திரசேகரன் இராமையா, விலாயா பெர்செக்குத்துவான் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவர் மற்றும் பொருளாளராக பார்வதி ஆறுமுகம், மலாக்கா மாநில தேசிய வகை ஆலோர் காஜா தமிழ்ப்பள்ளி மலாக்கா மாநிலத்தை சேர்ந்தவராவார்.
மடானி கோட்பாட்டில் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கம் அதிகாரபூர்வ நிறைவு விழா மாண்புமிகு அருள் குமார் ஜம்புநாதன், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் & தலைவர், உள்ளாட்சி மேம்பாடு, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அவர்களால் நிறைவு செய்து வைக்கப்பட்டது.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 12:34 pm
அமைச்சரவை மாற்றம் இல்லை; ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: பிரதமர்
December 1, 2025, 10:47 am
தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; ஒருவர் உயிரிழந்தார்: 7 பேர் படுகாயம்
December 1, 2025, 9:30 am
மஇகா அனுப்பிய கடிதம் தேசியக் கூட்டணியில் சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல: டத்தோ ஆனந்தன்
December 1, 2025, 9:29 am
சபாவில் வெற்றி பெற்றது பாஸ் கட்சியின் புதிய தொடக்கமாகும்: ஹாடி
November 30, 2025, 10:01 pm
