நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது

சுபாங்ஜெயா:

200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது.

ஜிவி ரைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் மாண்ட் இதனை கூறினார்.

உள்ளூர் இ-ஹெய்லிங் நிறுவனமாக ஜிவி ரைட் விளங்குகிறது.

இந்நிறுவனம் Get Driver  என்று அழைக்கப்படும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இது புதிய ஓட்டுநர்கள் அல்லது பயணிகளை தளத்திற்கு வெற்றிகரமாக பரிந்துரை செய்யும் தற்போதைய ஓட்டுநர்களுக்கு 200 ரிங்கிட் ரொக்க வெகுமதியை வழங்குகிறது.

இந்த திட்டம் ஜிவி ரைட்சமூகத்தை விரிவுபடுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள ஓட்டுநர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை வழங்குவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், சுபாங் ஜெயா பகுதிக்குள் ஜிவி ரைட் ஓட்டுநர்களாக மாற ஓட்டுநர்கள் நண்பர்களைப் பரிந்துரைக்கலாம்.

புதிய ஓட்டுநர் 30 நாட்களுக்குள் 30 பயணங்களை முடித்தவுடன், பரிந்துரைக்கும் ஓட்டுநர், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட ஓட்டுநர் இருவரும் தலா 200 ரிங்கிட் பெறுவார்கள்.

மேலும் ஜிவி ரைட் புதிய பயணிகளைப் பரிந்துரைக்க ஓட்டுநர்களை அனுமதிக்கிறது.

அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட பயணி அதே காலக்கெடுவிற்குள் 30 பயணங்களை முடித்தவுடன் 200 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என்று கபீர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நன்மைகள் மற்றும் வருமான வாய்ப்புகள் கூட்டாகப் பகிரப்படும் வகையில் ஜிவி ரைட் அதன் சமூகத்தில் சேர அதிக ஓட்டுநர்கள், பயணிகளை ஊக்குவிக்கிறது.

மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் www.gvride.com இல் உள்ள அதிகாரப்பூர்வ ஜிவி ரைட் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 012-5003217 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset