நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கெடா மாநிலம் பதிவாகியுள்ளது

அலோர்ஸ்டார்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாநிலமாக கெடா மாநிலம் பதிவாகியுள்ளது.

கிளந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமீபத்திய மாநிலமாக கெடா மாறியுள்ளது.

இதன் மூலம் மூன்று மாநிலங்களிலும் தற்காலிக வெளியேற்ற மையங்களுக்கு வெளியேற்றப்பட்ட மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 2,112 ஆக உயர்ந்துள்ளது.

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த 66 குடும்பங்களைச் சேர்ந்த 225 பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கெடா மேம்பாட்டு ஆணையம், சுராவ் நாகா லிலிட், பெர்மாடாங் டோக் டிக் ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கெடா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கம்போங் சியாம், கம்போங் புக்கிட் சாரங் அயாம், கம்போங் பாயா செர்டாங், கம்போங் டிடி டோக் அரிஸ், கம்போங் பத்தாங் சினாவைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கை இன்று தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset