நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேரளாவில் அதிகரித்துள்ள மூளையை உண்ணும் அமீபா தொற்று குறித்து மலேசிய ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: யுவராஜா குருசாமி

பத்துமலை:

கேரளாவில் அதிகரித்துள்ள மூளையை உண்ணும் அமீபா தொற்று குறித்து மலேசிய ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி எச்சரித்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக நீரில் பதிவாகியுள்ள மூளையை உண்ணும் அமீபா தொற்றுகள் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பக்தர்களுக்கும் சங்கம் கேட்டு கொள்கிறது.

ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக, இணைக்கப்பட்ட விதிமுறைகளை பக்தர்கள்  கண்டிப்பாக பின்பற்றுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

நதி குளியலைத் தவிர்ப்பது, மூக்குக் கிளிப்புகளைப் பயன்படுத்துவது, பாதுகாப்பான பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது,மாசுபட்ட நீர் மூக்கில் நுழைவதைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

இந்த புனித பயணத்தின் போது உங்கள் உடல்நலம், பாதுகாப்பு எங்களுக்கு முன்னுரிமையாகும் என்று யுவராஜா குருசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset