நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருக்கார்த்திகை விழா; டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படும்: டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவில் திருக்கார்த்திகை விழா வரும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படும்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா இதனை கூறினார்.

எதிர்வரும் விசுவாவசு ஆண்டு கார்த்திகை மாதம் டிசம்பர் 3ஆம் திகதி புதன்கிழமை அன்று, மலேசியாவில் திருக் கார்த்திகை உபய விழா மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

திருக்கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலில் சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெற்று மாலையில் சொக்கப்பானை கொழுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் பத்துமலைத் திருத்தலத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆறுகால பூசைகள் நடைபெறுவதுடன் மாலையில் சொக்கப்பானை கொழுத்துதல் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் மேற்குகைக் கோயில்களுக்கு செல்லும் படிக்கட்டுகளில் பக்தர்களால் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு பக்தி பரவசத்துடன் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதேபோன்று இவ்வாண்டும் அக்கண்கொள்ளாக் காட்சியை காண அனைவரும் திரண்டு வர வேண்டும்.

மேலும் எமது பாரம்பரியமும், ஆன்மீகப் பண்பாடும் உயர்வடைய இந்த விழா மிகுந்த திருநாளாகக் கருதப்படுகிறது.

இந்த புண்ணிய நாளில் பக்தர்கள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்து, முருகப் பெருமானின் அருளைப் பெறும் பாக்கியம் அறிவிக்கப்படுகின்றது.

எல்லா பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தெய்வீக கிருபையைப் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த திருநாள், எமது சமூகத்தில் ஒற்றுமையையும் ஆன்மீக ஒளியையும் அதிகரிக்கட்டும்.

எமது பாரம்பரியத்தையும் மரபையும் பேணிக்காக்கும் பொறுப்பில் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset