நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேமுவில் இருந்து வெளியேறுவதா இல்லையா; மஇகாவின் முடிவை ஏற்றுக்கொள்ள தயார்: ஜாஹித்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியில்  இருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பான மஇகாவின் முடிவை ஏற்றுக்கொள்ள தயார்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

தேசிய முன்னணியில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்ற மஇகாவின் முடிவை ஏற்றுக்கொள்வதற்கு நான் திறந்த மனதுடன் உள்ளேன்.

மேலும் அதன் உள் விவகாரங்களில் தலையிடுவதில் தனக்கு விருப்பமில்லை.

இருந்தபோதிலும் கூட்டணிக் கூறுகளின் முன்னேற்றங்களை, குறிப்பாக மஇகா ஆண்டு பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை, எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

அவர்களின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டதை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன்.

பிரதிநிதிகள், மஇகா தலைமை எடுக்கும் எந்த முடிவுகளையும் நான் மதிக்கிறேன்.
அவர்களின் உள் விவகாரங்களில் தலையிடும் எண்ணம் எனக்கு இல்லை.

அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது சம்பந்தப்பட்ட கட்சியைப் பொறுத்தது.

நாங்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம் என்று அவர் ஊடகங்களைச் சந்தித்தபோது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset