நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலாயில் மூன்று வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் 3 பேர் மரணம்

கூலாய்:

கூலாயில் மூன்று வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.

கூலாய் மாவட்ட போலிஸ் தலைவர் டான் செங் லீ இதனை கூறினார்.

நேற்று இங்குள்ள ஜாலான் செனாய் - சீலாங்கில் இரண்டு லோரிகளும் ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளாகின.

மாலை 4.15 மணியளவில் நடந்த இந்த விபத்து, 68 வயது உள்ளூர்வாசி ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா காரை பின்னால் இருந்து லாரி மோதியதில் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக முதற்கட்ட போலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட காரில் 65 முதல் 87 வயதுக்குட்பட்ட மூன்று பெண் பயணிகள் இருந்தனர்,  லோரியை 46 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்றார்.

மோதலின் விளைவாக, சம்பந்தப்பட்ட வாகனம் எதிர் பாதையில் சென்று, 23 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற மற்றொரு லோரியுடன் மோதியது.

23 வயது லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

அதே நேரத்தில் மற்றொரு லோரி ஓட்டுநரும் காரில் இருந்த ஒரு பயணியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தனர் என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset