நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சென் ஜிங், சியாவோ யூ ஆகிய இரு பாண்டா கரடிகளும் ஒரு மாத கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

சென் ஜிங், சியாவோ யூ ஆகிய இரு பாண்டா கரடிகளும் ஒரு மாத கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து சென் ஜிங் (ஆண்), சியாவோ யூ (பெண்) ஆகிய பாண்டா கரடிகள் மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனால் தேசிய மிருகக்காட்சி சாலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட பாண்டா கரடி பாதுகாப்பு மையம் கவனத்தின் மையமாக இருக்கும்.

இந்த  பாண்டா கரடி ஜோடி நேற்று இரவு 8.30 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு ஒரு அறிக்கையில்,

பாண்டா கரடி ஜோடி  மிருகக்காட்சிசாலையில் உள்ள ராட்சத பாண்டா பாதுகாப்பு மையத்திற்கு உகந்த, பாதுகாப்பான, வசதியான சூழலுடன் கொண்டு வரப்படும்.

அதன் பின் இரண்டு பாண்டா கரடிகளும் ஒரு மாத கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset