நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எத்தியோப்பியாவில் தனித்துவமான வரவேற்பு வழங்கப்பட்டது

அடிஸ் அபாபா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எத்தியோப்பியாவில் தனித்துவமான வரவேற்பு  வழங்கப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எத்தியோப்பியா நாட்டிற்கான அதிகாரப்பூர்வ பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

அவரை எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபி அகமது அலி, தனித்துவமானது  வரவேற்றார்.

குறிப்பாக டத்தோஸ்ரீ அன்வார் பயணித்த வாகனத்தை அவரே ஓட்டிச் சென்றார்.

இங்குள்ள போலே சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததும், அபி அன்வாரையும் தூதுக்குழுவையும் நேரில் வரவேற்று ஆச்சரியப்படுத்தினார்.

பின்னர் இரு தலைவர்களும் ஒரு சுருக்கமான சந்திப்புக்காக தலைவர்கள் ஓய்வறைக்குச் சென்றனர்.

பின்னர் பிரதமரை எத்தியோப்பிய அறிவியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அவர் அழைத்துச் சென்றார்.

இது அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமைகளின் வரலாற்றைக் காட்டுகிறது.

விமான நிலையத்திலிருந்து காரில் சுமார் 30 நிமிடங்களில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், எத்தியோப்பியாவின் நவீன உள்கட்டமைப்பு முன்னேற்றத்தின் அடையாளமாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset