செய்திகள் உலகம்
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் மலேசியாநாவ் (MalaysiaNow) இணைய செய்தித்தளத்தைத் தடை செய்யும்படி இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பொய்த்தகவலுக்கு எதிரான சட்டத்தின் (POFMA) கீழ் மலேசியாநாவ் தளத்திற்குச் சென்ற சனிக்கிழமை திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்தச் செய்தித்தளம் அதற்கு இணங்காததால் அதனைத் தடைசெய்யும்படி இப்போது உத்தரவு வந்துள்ளது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் உள்துறை அமைச்சும் இணைந்து அதனை அறிவித்தன.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வத்திற்குச் சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரை நடத்திய விதம் குறித்து மலேசியாநாவ் நவம்பர் 9ஆம் தேதி பொய்த்தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.
அதற்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவை மலேசியாநாவ் நிராகரித்தது தங்களுக்குத் தெரியும் என்று இரு அமைச்சுகளும் கூறின.
சிங்கப்பூரின் பொய்த்தகவல்களை ஆராயும் முறையை மலேசியாநாவ் குறைகூறியதையும் அறிவதாக அவை தெரிவித்தன.
"எங்களுடைய அரசாங்கம் சொல்வதையே நாங்கள் கேட்கமாட்டோம். அவர்கள் (சிங்கப்பூர்) சொல்வதைக் கேட்போம் என்று அவர்கள் எப்படி நினைக்கலாம்?" என்று மலேசியாநாவ் செய்தியாசிரியர் வினவினார்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
