நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவுக்கு பட்டம், பதவிகள் வேண்டாம்; மரியாதை வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஷாஆலம்:

மஇகாவுக்கு பட்டம், பதவிகள் வேண்டாம். ஆனால் உரிய மரியாதைகள் வழங்கப்பட வேண்டும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

தேசிய முன்னணி உருவானது முதல் மஇகா இக்கூட்டணியில் முக்கிய பங்கை வகித்து வருகிறது.

குறிப்பாக தேசிய முன்னணியின் மகிழ்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி, போராட்டம் என அனைத்திலும் மஇகாவின் பங்கு அளப்பரியது.

குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய முன்னணி, அம்னோ மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

இருந்தாலும் மஇகா தொடர்ந்து தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

கடந்த தேர்தலில் தேசிய முன்னணி நம்பிக்கை கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததற்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்றதற்கும் மஇகாவின் பங்கு உள்ளது.

இருந்தாலும் மஇகாவுக்கு அமைச்சரவை உட்பட எதிலும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 

பதவிகள் இல்லை என்பதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.

ஆனால் உரிய மரியாதை வழங்கப்படாமல் போனதால்தான் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மஇகா தள்ளப்பட்டுள்ளது.

ஆக மஇகாவின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் மாநாடாகவும் இது அமையும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset