நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா மாநாட்டிற்கு பிரதமர் வாழ்த்து

ஷாஆலம்:

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா மாநாட்டிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது.

கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இம்மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மலர் கூடையை அனுப்பி வைத்தார்.

அதே வேளையில் பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

மஇகாவின் தேசியப் பேராளர் மாநாடு முக்கிய மாநாடாக விளங்குகிறது.

மலேசிய இந்திய சமுதாயத்தின் உரிமை, சமூக நலனை பாதுகாக்கும்  மாநாடாகவும் இது அமைகிறது.

மடானி கொள்கையின்படி, அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான, முற்போக்கான கொள்கைகளை தொடர்ந்து வகுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மேலும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, மாற்றங்களைச் செய்வதற்கான துணிச்சல், நாட்டை வளர்ப்பதில் ஒற்றுமை ஆகியவற்றுடன் மட்டுமே, ஒவ்வொரு குடிமகனும் சமமான வளர்ச்சியின் பலன்களை அனுபவிப்பதை உறுதி செய்ய முடியும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset