நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறுமா?: பரபரப்பான சூழ்நிலையில் 79ஆவது தேசிய பொதுப் பேரவை தொடங்கியது

ஷாஆலம்:

மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சியாக மஇகா விளங்கி வருகிறது.

இக் கட்சியின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இப் பேரவை நடைபெறுகிறது.

மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.

அதன் பின் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையுரை ஆற்றினார்.

இவ்வாண்டின் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

காரணம் தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறுமா என்ற கேள்விக்கு இன்று பதில் சொல்லப்படும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இதனால் அனைவரின் கவனமும் இம்மாநாட்டின் பக்கம் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset