நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா

பெய்ஜிங்:

சீனா அதன் மக்களை ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி எச்சரித்துள்ளது.

ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி (Sanae Takaichi) தைவான் பற்றி முன்வைத்த கருத்துகளால் சர்ச்சை எழுந்துள்ள வேளையில் சீனா அவ்வாறு கூறியுள்ளது.

ஜப்பானுக்குச் செல்லும் விமானப் பயணங்களை ரத்து செய்வோர் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்று சீனாவின் முக்கிய விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.

டிசம்பர் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு அது பொருந்தும்.

அதேபோல ஜப்பானுக்குப் பதில் வேறு இடங்களுக்குப் பயணம் செய்ய விரும்பினால் கூடுதல் கட்டணமின்றி மாற்றம் செய்யலாம் என்று விமான நிறுவனங்கள் குறிப்பிட்டன.

தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset