நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு 

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மாட்டிறைச்சி, தக்காளி, காபி, வாழைப்பழம் உள்ளிட்ட உணவு இறக்குமதிகளுக்கு வரிவிலக்களிக்கும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட அனைத்து நாட்டுப் பொருள்கள் மீதும் வரி விதிக்கப்பட்டது.

தொடர்ந்து உயரும் மளிகைப் பொருள்களின் விலை குறித்த கவலையால் வரிவிலக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதிய வரிவிலக்கு வியாழக்கிழமை (20 நவம்பர்) நள்ளிரவு நடப்புக்கு வரும்.

இருப்பினும் இந்த நடவடிக்கை அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.

இறக்குமதி வரி விலைவாசி உயர்வுக்குக் காரணமல்ல என்று டிரம்ப் நிர்வாகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது.

வெர்ஜீனியா (Virginia), நியூ ஜெர்ஸி (New Jersey), நியூயார்க் சிட்டி (New York City) ஆகியவற்றில் நடந்த மாநில, உள்ளூர்த் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினரின் தொடர் வெற்றிக்குப்பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தல் பிரசாரங்களின்போது விலைவாசி உயர்வு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset