நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு

சிங்கப்பூர்:

MalaysiaNow நாளேட்டுக்கு POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவை சிங்கப்பூர் அரசு பிறப்பித்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மீது போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

MalaysiaNow நாளேடு வெளியிட்ட அறிக்கையில் 5 பொய்யான விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சட்டத்திற்குப் புறம்பாகப் பன்னீர்செல்வத்தின் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று அது தெளிவுபடுத்தியது.

தண்டனைக்குமுன் சட்டபூர்வமான அனைத்துச் செயல்முறைகளும் நிறைவடைந்ததை அது சுட்டியது.

மரண தண்டனையிலிருந்து ஆயுள்தண்டனைக்கு மாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியது தவறு என்றும் அது சுட்டியது.

விசாரணைக்கு உதவியாக எந்தப் புதிய தகவலையும் பன்னீர்செல்வம் சமர்ப்பிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

MalaysiaNow நாளேடு வெளியிட்ட அறிக்கை சிங்கப்பூர் அதிகாரிகள் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினருக்குப் பொய்யான தகவல்களைக் கொடுத்து அவர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியது.

பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட நேர்காணல் செயல்முறையில் மலேசிய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அது வெளிப்படையாக நடத்தப்பட்டது என்றும் கையொப்பம் இடுவதில் அவர்கள் ஏமாற்றப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset